ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் (வேன்) தானமாக வழங்கப்பட்டது.

பீஸ் (அமைதி) அறக்கட்டளையில் கைவிடப்பட்ட குழந்தைகள் 135 பேர், முதியவர்கள் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 21 பேர், மூளைவளர்ச்சி குறைபாடுகள் உடையவர் 36 பேர் என மொத்தம் 333 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை சிறப்பான அறக்கட்டளை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 23ம் தேதியன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெற்கு மண்டல பொதுமேலாளர் சந்திப் வேன் ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்டல முதன்மை மேலாளர் பென்னி சி.தாமஸ் உடனிருந்தார்.