தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 1 மூலம் துணை மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 89 பணியிடங்களுக்கு டிஎன்பிஸ்சி அலுவலகத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpscexams.net அல்லது www.tnpscexam.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இந்த தொகுதி 1-க்கான பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சிறப்பான வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பணியாற்றுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...