தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 1 மூலம் துணை மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 89 பணியிடங்களுக்கு டிஎன்பிஸ்சி அலுவலகத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpscexams.net அல்லது www.tnpscexam.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த தொகுதி 1-க்கான பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சிறப்பான வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பணியாற்றுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்