கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவரது மகன் மணி (45) எனவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. 12 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தின் போது சவுமியா மணி குடும்பத்தார்க்கு 25 சவரன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மேலும் வரதட்சணை கேட்டு சவுமியாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும்,சமீபத்தில் மணி அவரை தாக்கியதால் காயமடைந்த சவுமியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து சவுமியா பி.என். பாளையம் போலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.