கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் ஆள்கடத்தல் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். செல்வகுமார் பணியன் வியாபாரம் செய்துவந்தார். தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். மேலும், சித்தாப்புதூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். 2நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், உள்ளே இருந்து துர் நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் பந்தைய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பினர். தொடர்ந்த் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.