இனி வங்கியில் மட்டுமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும்..!


கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ள  நோட்டுகள் ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசால் கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்க், தபால் நிலையங்கள், மின் கட்டணம் செலுத்துதல், மாநகராட்சி வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான காலவரம்பு நவம்பர் 24ம் தேதி (இன்று) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இனி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் தங்களது கணக்குகளில் இந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்கைத் தொடங்கியும் அதில் டெபாசிட் செய்யலாம். 

டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதை 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த வங்கிகளின் விவரம் விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இன்று ஒருநாளைக்கு எங்கு பயன்படுத்தலாம்?

1. அரசு மருத்துவமனைகள்

2. பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

3. மருந்தகங்கள், பால் அங்காடி

4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள்

5. தகன மேடை

6. ரெயில் டிக்கெட்டுகள்

7. அரசு பஸ் போக்குவரத்து

8. விமான டிக்கெட்

9. மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள் கட்டணம்

10. பிரதான இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறுமிடங்கள்

உள்ளிட்ட இடங்களில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இன்று இரவு வரை பயன்படுத்த முடியும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...