ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்(19). இவர் கோவையில் தங்கி வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே வகுப்பை சேர்ந்த பவதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பெற்றேருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோகுல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ராமகிருஷ்ணன் அவரை பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ராமகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார் . தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.