மத்திய அரசின் 500, 1000 ரூபாய் தடை அறிவிப்பால் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் குடும்பத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
அகில இந்தியா அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மூன்றாம் இடம் என்பது உலகறிந்த உண்மை. இத்தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அதிர்ச்சி தகவல் வழங்கியது. இதனால், கடந்த 15 நாட்களாக தங்க நகை வியாபாரிகள் வழங்கும் ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தயார்நிலையில் உள்ள புதிய தங்க நகைகள் விற்பனையும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது.
இத்தகைய மோசமான சூழ்நிலையினால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 55 ஆயிரம் குடும்பத்தினர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால், தொழில் சமுதாயத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு மாவட்ட அரசின் மூலம் விரைவில் மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை புழக்கத்திற்கு வழங்க வேண்டி அழுத்தம் தர வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.