காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை


கோவையில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சுபாஷ் (19). இவர் கோவையை அடுத்த கணியூரில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுபாஷ், சக ஊழியர்கள் நான்கு பேருடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட சுபாஷ் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றவர்கள் வீடுதிரும்பிய போது, சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சுபாஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுபாஷ் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...