கோவை மாநகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி மற்றும் தொழில் வரி ஆகிய வரிகளை செலுத்த மாநகராட்சி வரி செலுத்தும் இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
''கோவை மாநகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி மற்றும் தொழில் வரி ஆகிய வரிகளை மாநகராட்சி வரி செலுத்தும் இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மட்டும் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி (வியாழக்கிழமை) மாலை வரை செலுத்தி இரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம்.''
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்