கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி (71). நேற்று மாலை தனது வீட்டின் முன் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் பானுமதி ஈடட்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் பானுமதியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடதிற்கு வந்த போலீசார் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.