500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளில் போதுமான பணம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அன்றாடம் பொதுமக்கள் தங்களது பணியையும் விட்டுவிட்டு வங்கியிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சிரமங்கள் நிலவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பணத்தை மாற்ற தவிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.