கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரும் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுஜிலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்த குமாருக்கு சமீப காலமாக குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சுஜி லட்சுமி நேற்று முன் தினம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோவை அரச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஜிலட்சுமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழித்த புகாரின் பேரில் ஆனந்த குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்