மறைந்த தமிழீழ விடுதலை போராட்டத்த்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்கான சுவரொட்டியை அச்சடித்தாலும், ஒட்டினாலும் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தமிழர் விடியல் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-
பிரபாகரனின் உருவப்படத்தை அச்சடிக்க கோவையில் தான் அதிக கெடுபிடி நிலவுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படிருந்தாலும் அதன் தலைவர்கள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போலீசார் அச்ச்கங்களில் புகுந்து மிரட்டுவது அடக்குமுறையை காட்டுகிறது. எனவே, மற்ற மாவட்டங்களை போல எங்களுக்கும் பிரபாகரனின் உருவம் பதித்த சுவரொட்டியை அச்சடிக்கவும், சுவரில் ஒட்டவும் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.