பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்துவதற்காக கடந்த மாதம் கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சி பணியை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரங்களின் அழிவில் இருந்து மீட்க கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்தனர்.

அதன்பின், சாலையோர மரங்களை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் மரங்களை நடுவதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு வழங்கினார். இந்த முயற்சியில் சாலையோர மரங்களை ஈச்சனாரி சாலையில் உள்ள ரத்தினம் கல்லாரியில் நடுவதற்கு அந்நிறுவனத்தினர் அனுமதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சுந்தராபுரம் சாலையோர பகுதியில் இருந்த மரங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்டு, ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது.
அந்த மரங்கள் ஊழியர்களின் தொடர் கணிப்பு மற்றும் பராமரிப்பால் தற்போது மறுபிறவி எடுத்ததைபோல் வளர தொடங்கியுள்ளது.

மரங்களை வெட்டி அதனை அழிக்கும் முயற்சியில் இருந்து மீட்டெடுத்து தற்போது அந்த மரங்கள் நல்ல முறையில் துளிர்விட்டு வளர்வது அதனை மீட்ட தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.