தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூசந்த (66). இவரது மகள் ரேவதி மற்றும் மகன் ரமேஷ் குமார் என்பவரும் கடந்த் சில தினங்களுக்கு முன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து விடு திரும்பிய அவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள பூசந்து வின் மற்றொரு மகள் ரேணுகாவின் வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் , இன்று காலை பூசந்த் மற்றும் அவரது மகள் ரேவதி ஆகியோர் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர். தொடர்ந்து ரமேஷ் குமார் மயங்கி விழுந்தார்.
இதையறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.பின்னர், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.