கோவையைச் சேர்ந்த நண்பர்கள் 12 பேர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மூன்று கார்களில் கோவையில் இருந்து சனிக்கிழமையன்று புறப்பட்டுள்ளனர். இவர்களது கார் அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி காபி ஒர்க்ஸ் என்ற இடத்தின் அருகே இரவு 12.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது, கேரளாவில் இருந்து உதகைக்கு சென்றுவிட்டு மேட்டுப்பாளையம் வழியாக கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, இவர்களது ஒரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த முத்து (21), வினித் (22), கரண் (21) ஆகிய மூன்று வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான காரில் இருந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.