கோவை மதுக்கரையில் ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி


கேரளாவிற்கு உட்பட்ட பாலக்காடு வாளையாறு வனப்பகுதியிலும் இதையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் மதுக்கரை வனப்பகுதியிலும் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில்பாதையே, யானைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயிலில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.05 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டம் ரயில் பாதையை கடந்து செல்ல முயன்றது. இதனிடையே, ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால், கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று எதிர்பாராத வகையில் ரயிலில் சிக்கியது. 



ரயிலின் என்ஜின் மோதியதில் பலத்த காயமடைந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அடக்கம் செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் மணிக்கு 30 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடன் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அந்த வேகக் கட்டுப்பாடு மீறப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுக்கரை - வாளையாறு இடையேயான வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களில் இதுவரை 4 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...