தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறுதரப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதனிடையே, தமிழக முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய வேண்டி கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை இன்று நடைபெற்றது.



இதில், குலோகா கோசலா என்னும் கோமாதா வழிபாடு அமைப்பும் இன்று துவங்கப்பட்டது. இதனை அதிமுக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்து சிறப்பித்தார். பக்தி வினோத் சுவாமி மகாராஜ் குத்துவிளக்கேற்றி வேத மந்திரங்களை முழங்க வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோமாதாக்களுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.அறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூணன் உள்ளட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.



முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி உதகை முத்துநாடு மந்து கோவிலில் பாரம்பாரிய தோடர் இன உடை அணிந்து சிறப்பு வேண்டுதல் நடைபெற்றது.

இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் கலந்து கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...