கோவையை அடுத்த செல்வபுரம் பகுதிதில் இருந்து உக்கடம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் எந்த வித சிக்னலும் இன்றி சாலையின் இடதுபுறமாக திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் கார் மீது மோதாமல் இருக்க வலது புறமாக பேருந்தை திருப்பினார்.


இதில், அப்பகுதியில் இருந்த குளத்திற்குள் பேருந்து செல்ல முயன்றது.உடனடியாக ஓட்டுனர் பேருந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததால் பேருந்து குளத்திற்குள் இறங்குவது தவிர்க்கப்பட்டது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த உக்கடம் போலீசார் கார் ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.