கோவையில் சேவல் சண்டை நடத்திய மூவர் கைது

கோவை ஆனைமலை யை அடுத்த களத்துப்புதூர் ரயிவே கேட் அருகே உள்ள மைதானம் ஒன்றில் சேவல் சண்டை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அப்போது அங்கு  மூவர் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜோதீஷ்குமார் (33), முத்துசாமி(30) மற்றும் ஆனைமலையை சேர்ந்த  துரையப்பன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் , சண்டைக்கு பயன்படுத்திய 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...