கோவை ஆனைமலை யை அடுத்த களத்துப்புதூர் ரயிவே கேட் அருகே உள்ள மைதானம் ஒன்றில் சேவல் சண்டை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு மூவர் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜோதீஷ்குமார் (33), முத்துசாமி(30) மற்றும் ஆனைமலையை சேர்ந்த துரையப்பன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் , சண்டைக்கு பயன்படுத்திய 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்