சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட அலத்திவட்சினாம்பாளையம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோகரன் மற்றும் மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், தற்போது உயிரிழந்துள்ள இந்த பெண் யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். இறந்து 2 முதல் 3 நாட்கள் கடந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் நலக் குறைவால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.