எடை குறைவாக பிறந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது.
உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கு கடந்த 24ம் தேதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்குழந்தை பிறந்தது. 1 கிலோ மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே , சரண்யா குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் திடீரென மாயமானார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.
குழந்தை இறந்தது தெரியாமல் இன்று மருத்துவமனைக்கு வந்த சரண்யா மருத்துவரிடம் குழந்தையை பற்றி கேட்டார். அதற்கு குழந்தை இறந்துவிட்டதாக் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு சரண்யா, குழந்தையின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய சென்றதாக விளக்கமளித்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.