மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும் ராஜாராம் என்பவர் சொத்துவரி செலுத்தாதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மண்டலம் வார்டு எண் 76, ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வரும் ராஜாராம், என்பவர் வரிவிதிப்பு எண் - 76136004, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.15 ஆயிரத்து 980 மற்றும் வரிவிதிப்பு எண் - 76136005, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.9 ஆயிரத்து 196 என மொத்தம் 25 ஆயிரத்து 176 ரூபாய் சொத்துவரி நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவரது தொழிற்சாலையின் முன்பு குப்பைத் தொட்டி வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.