
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை கோவை சி.எம்.எஸ் கல்லூரியுடன் இணைந்து மாநில அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது.
இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சி.எம்.எஸ் கல்லூரியின் முதல்வர் சந்தியா மேனன் வரவேற்புரையாற்றினார். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆர்.வனஜா துவக்கவுரையாற்றினார்.
நிறைவாக, கோவை டி.ஆர்.ஏ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சிவலிங்கம் நன்றியுரையாற்றினார்..