ஸ்டார்ட் ஸ்ட்ரைடு ‘Startup Strides’ என்னும் மாரத்தான் ஓட்டப் போட்டி வரும் டிசம்பர் 4ம் தேதியன்று கோவையில் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட டி.ஐ.இ சார்பில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டி.ஐ.இ வளரும் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.
இந்த மாரத்தான் கோவை மட்டுமல்லாது, சன்டிகர், தில்லி, ஹைதராபாத், கேரளா, நாக்பூர், ராஜஸ்தான் மற்றும் தம்பாபே உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, டி.ஐ.இ கோவை மாவட்ட தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-
இந்த மாரத்தான் நிகழ்வு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமையும். புதிய தொழில் முனைவோர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும். கோவை மாவட்டமானது தொழில் முனைவோர்களுக்கு ஒரு சிறந்த பகுதியாக உள்ளது. நாங்கள் அதை மேலும் ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.
ஸ்டார்ட் ஸ்ட்ரைடு மாரத்தான் தலைவரும், பார்க் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுஷா ரவி கூறியதாவது :-
இந்நிகழ்ச்சி பல லட்ச தொழில் முனைவோர்களின் பல்வேறு கனவுகளை குறித்ததாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தொழில் முனைவோர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்'' என்றார்.
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற http://youtoocanrun.com/races/?ee=680 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.