தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப் பிரச்சனை 50 நாட்களில் தீர வாய்ப்பில்லை. பணப்புழக்கம் சீரடைய 7 மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும், பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தை மதித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சாதாரன மக்கள் பிரச்சனையை என்னிப் பார்க்காமல் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்பது வேடிக்கையானது.

பணம் எடுப்பதற்கு தினம்தினம் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அவசியம் அற்றது. இந்த தாள்கள் கருப்பு பணம் பதுக்கலை மேலும் எளிதாக்கும். புதிய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து, பயிர்கள் கருகுவதை பார்த்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...