கோவை, ராஜ வீதியில் உள்ள டி.கே மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் இன்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகாரர்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த அவர், பின்னர் காய்கறிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் துணி பைகளை கொண்டு வருமாறும் எடுத்துரைக்க கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினார்.

அப்பகுதியில், மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது. கடைக்காரர்கள் மார்க்கெட் பகுதியில் தெருவிளக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும், குடிநீர் வசதியும் வழங்கவும் ஆணையரிடம் கேட்டுக் கொண்டனர் .