கோவை: அரசுக் கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில்
ஆட்சிமொழிப் பயிலரங்கு இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது.
கருத்தரங்கு நிகழ்ச்சியை கோவை வருவாய் கோட்டாசியர் அலுவலர் மதுராந்தகி
துவங்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அன்புச்செழியன் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி, அரசு அலுவலர்கள் எல்லா நடைமுறைகளிலும் தமிழ்மொழியை கடைபிடிக்கும் வகையில் சட்டம் மற்றும் அதன் அடிபடையில் இந்த ஆலோசனை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களுக்கு இந்த தமிழ்மொழிப் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று நடைபெறும் பயிலரங்கில் அரசு அலுவலர்களுக்கான அரசு ஆணைகள், அலுவலக குறிப்புகள், ஆட்சி மொழி சட்டம் வரலாறு, வரைவுகள் மற்றும் செய்முறை ஆணைகள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இப்பயிலரங்கு நடைபெறுகிறது. இரண்டாம் நாளன்று நிறைவு விழா நடைபெறும். இவ் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், அகரமுதலித் திட்ட இயக்குநர் (பொ) மற்றும் சேலம் மண்டலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் செழியன், திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் துரை.தம்புசாமி, தூத்துக்குடி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் சிவசாமி மற்றும் 200க்கும் மேற்பட்ட கோவை மண்டல பல துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.