கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலை சிக்னலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் எய்ட்ஸ்-க்கான சின்னங்கள் கொண்ட ரிப்பன் உள்ளிட்டவற்றை வழங்கி எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில், எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் முதல்வர் கருணாகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் கோபாலசாமி, தேசிய மாணவர் படை அலுவலர் பிரகதீஸ்வரன் மற்றும் விஷ்னுதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவல் துறையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
