கன மழை காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 31 இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியபட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிஹரன்,வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவு
மேலும் முன்னெச்சரிக்கை,மீட்பு மற்றும் தேடுதல் பணி ஆகியவற்றுக்காக 4 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 31 இடங்களிலும் நிவாரண முகாம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்,கோவை மாவட்ட நிர்வாகம் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.