500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணப் பரிவர்த்தனையும் கட்டுப்பாட்டில் உள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.
அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மீதி தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பாதித் தொகை மட்டுமே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், முழுமையான ஊதியத்தை உடனடியாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அரசு போக்குவரத்து பேருந்து பனிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர் மேற்கொண்ட பணிக்கான ஊதியத்தை உடனடியாக முழுத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.