கோவையை சேர்ந்த ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது.

இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளையின் நிறுவனர் கருணாகரன் கூறுகையில், 'இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கிய எங்கள் அமைப்புக்கு பல்வேறு தன்னார்வலர்களும் சமூக அமைப்புகளும் உதவி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளோம் . மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் இலவச திருமண பதிவையும் செய்து கொடுத்துள்ளோம்' என்றார்.

இவ்விழாவில் ஆசிரம்பள்ளி தாளாளர், குருஜி சிவக்குமார், ஈர நெஞ்சம் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.