தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வடக்கு, கு.வடமதுரை கோட்டத்தில் சாதாரண வரிசை திட்டம் மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 350 விண்ணப்பங்கள் முன்னுரிமை திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர், விதவை மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் வாயிலாக முறையாக சென்னை SE/RE&I(D) பரிந்துரைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் விதவை சிறப்பு முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் கு.வடமதுரை கோட்ட அலுவலகத்தில் படிவம்-2யை பெற்றும் சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களுடன் மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் தங்களது விவசாய விண்ணப்பம் சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் விவசாய மின்னிணைப்பு வழங்க ஆவணம் செய்யப்படும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.