உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சியில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சியில், 21 நபர்களுக்கு ரூபாய் 1.93 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கோவை அரசினர் பொறியியற் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் உறுதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள், 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையாக நான்கு மணிநேர பணிகள் மேற்கொண்டவர்களுக்கு ஒருநாள் பணிக்கான சம்பளம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தலைமை செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்துள்ளார். 

மேலும், ஓய்வுத்திட்டத்தின் கீழ் பயனடைந்த குறைந்த பட்ச வயது வரம்பு 45-லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருமண திட்டத்தின் கீழ் உச்சவரம்பினை நீக்கி தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திருமண நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளார்கள்.

மேலும், கோவை மற்றும் திருச்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் ஆரம்ப நிலையில் செவித்திறன் குறையுடையோரை கண்டறியும் மையம் அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளன.

மேலும், கோவை மாவட்டத்தில் 3,849 மனவளர்ச்சி குன்றியோர்க்கு ரூபாய் 6 கோடியே 92 லட்சத்து 82 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட 470 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்புத் தொகையாக ரூபாய் 84 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. தசை சிதைவினால் பாதிக்கப்பட்ட 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சத்து 78 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட 64 நபர்களுக்கு பராமரிப்பு நிதியாக ரூபாய் 11 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50,000 ஆயிரமும், காது கேளாத மாணவ மாணவியருக்கு ரூபாய் 25,000 ஆயிரமும், பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 42,860 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 13,250 மாற்றுத்திறனாளிகளுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 197 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.08 கோடி மதிப்பீல் மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் மூன்று சக்கர சைக்கிள், கட்டணமில்லா பேருந்து பயண சலுகை, மடக்கு சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், திருமண உதவித்தொகை, தையல் இயந்திரங்கள், வங்கி மானியம், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 23,174 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 45 கோடி மதிப்பீல் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.93 லட்சம் மதிப்பீட்டில் காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, நவீன செயற்கைக்கால், ஊன்றுகோல் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். நிறைவாக முடநீக்கு வல்லுநர் சுதாகர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, அம்மன்.கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு மற்றும் அரசு அலுவலர்கள் கோவை மாவட்ட மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...