கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், மழை நீரினால் மணல்கள் மற்றும் குப்பைகள் அடித்துவரப்பட்டு சாலை ஓரங்களில் தேங்கிவிடுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் சாலை ஓரத்தில் மழை நீர் தேங்குவதால் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் சாலையோரத்தில் உள்ள சேர்சகதி மண்களை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.