கோவையில் செயல்பட்டு வரும் ஆரிய வைத்திய பார்மசியின் ஆராய்ச்சி நிலையம், ஐரோப்பாவில் செயல்படும் லாட்வியா பல்கலைக் கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆயுர்வேதம் மற்றும் உயிரியல் குறித்தான கருத்தரங்கம் கோவையில் நடத்தப்பட உள்ளது.
வரும் டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் கருத்தரங்கில் ஆயுர்வேத மருந்துகள் இன் விட்ரோ மற்றும் தலைகீழ் மருந்தியல் அணுகுமுறையில் குறித்தான முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேதிக் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.