பத்திரிக்கையாளர், விமர்சகர், தனது கருத்தை எங்கேயும் எப்போதும் எந்நிலையிலும் பதிவு செய்யும் வலிமை வாய்ந்தவர், சிறந்த நடிகர் என்ற பண்முகம் வாய்ந்தவர் என பன்முக திறமை கொண்டவர் 'சோ' என்ற சோ.ராமசாமி. துக்ளக் இதழின் ஆசிரியரான இவருக்கு வயது 82.
இவருக்கு கடந்த 29ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 'சோ' இன்று அதிகாலை மரணமடைந்தார்.
தொடர்ந்து அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.