விரைவில் புதிய நூறு ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும், பழைய மற்றும் புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், பழைய நூறு ரூபாய் நோட்டுகளை விட புதிய நூறு ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.