உடல் நலக்குறைவால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்த, தமிழக மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெட்ரோல் பங்குகள் தொடங்கி சிறு உணவகம் கூட பூட்டிக்கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். கோவையில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அசாதாரணமான சூழல் ஏற்படவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலையே சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கத் தொடங்கினர். இன்று அதிகாலையிலே பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்ல தொடங்கினர். சில வியாபர நிறுவனங்கள் தவிர பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மளிகை கடைகள் உட்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன.

கோவை சுங்கம் பஸ்டிப்போவில் இருக்கும் பேருந்துகள்பாதிக்கு மேல் இயங்க ஆரம்பித்துவிட்டதாக டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.மெல்ல மெல்ல கோவை மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.