கோவை மாவட்ட கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பகம் மூலம் பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுள்ள நபர்கள் தங்களது வயதுச் சான்றி, கல்விச் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை கோருவதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் சான்றின் நகல்களுடன் மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் கோவை- 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 30ம் தேதி ஆகும். இப்பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு வரை தேர்ச்சியோ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவரோ இருக்க வேண்டும். மேலும், 1.7.2016ம் தேதியில் 30 வயதிற்கு மேற்படாத பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.