குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் தலைவர் தீபம் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், அவர் பேசுகையில்; தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்த ஒரே பெண்மணி ஜெயலலிதா, அவர் மறைந்தது தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக கட்சியின் தொண்டர்கள் கண்ணீர் கடலில் வீழ்ந்துள்ளனர். குறிச்சி குளம் இயக்கம் சார்பில் தண்ணீருக்கு பல்வேறு செயல்கள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தண்ணீர்க்காக மழை நீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டார். மேலும் முல்லை பெரியார், காவேரி போன்ற தண்ணீர் பிரச்சனைகளுக்கு பல்வேறு வழக்குகள், கடிதங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், மறைந்த தமிழக முதல்வருக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் மணிகண்டன், கனகராஜ், ஆறுமுகம் துணை தலைவர் சுரேஷ், விவசாயிகள் சங்கம் வலுக்கு பாறை பாலு மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.