கோவையை அடுத்த முட்டத்துவயல் என்ற பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமாக 44.30 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் 46 பேருக்கு ஒப்படைக்கபட்டது. ஆனால், போலியான ஆவணங்களை தயாரித்த ஈஷா யோக மையம் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈஷா அபகரித்ததாக கூறப்படும் 44.30 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை 15 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஈஷா நிர்வாகத்தினர் இன்று 4 டிரேக்டர்களை கொண்டு அந்த நிலத்தை உழவு செய்தனர்.பேச்சுவார்த்தையில் இருக்கும் இடத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது கண்டனுத்துக்கு உரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகான வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.