உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை கூறிக்கொண்ட கிருஷண மூர்த்தி என்பவர், நேற்று ஜெயலலிதா குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக குற்றம் சாட்டி, சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சாக்ரடீஸ் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கறிஞர் சாக்ரடீஸ் கூறியதாவது :-
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான பிரச்சரத்தை செய்துவருகிறார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று கலவரம் ஏற்பட நேர்ந்தது.
மேலும் மன்னார் குடியில் வாழும் மக்களை மற்ற மக்கள் தவறாக எண்ணும் விதமாக அவரது பிரச்சாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போலி டாக்டராக பணியாற்றி கைதுசெய்யப்பட்டர். 2009ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் வாதாடியதாக வழக்கு உள்ளது. மேலும், அவர் சட்டக்கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் அதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து விசாரணை நடத்தி கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.