கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் தனியார் நகை நிறுவனத்திற்கு சொந்தமான டைமெக்சன் என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் யூனிட் 3-யில் சுமார் 400 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனம் திடீரென நரசிம்மநாயக்கன் பாளையத்திற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர்களும் ஆலை வாயிலில் அமர்ந்து தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இதைத்தொடர்ந்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக, ஏற்கனவே இந்நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.