கோவை, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் முதல்முறையாக நேச்சுரல்ஸ் அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.

செந்தில் பிரபு, கிளை உரிமையாளர் கூறுகையில்; பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி என ஆண், பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

மேலும், வெளியில் உள்ள நேச்சுரல்ஸ் நிலையத்தைவிட, கல்லூரியில் உள்ள நேச்சுரல்ஸ் மையத்தில் மாணவர்களுக்காக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வெற்றி பெரும் நிலையில் மற்ற கல்லூரிகளிலும் நேச்சுரல்ஸ் மையம் திறக்கப்படும். இம்மையம் கல்லூரியில் திறப்பதற்கு கல்லூரி அறங்காவலர் அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்தார்.
