கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.

புதிய ஆலயத்தின் கதவினை பேராயர் தாமஸ் அக்குவினாஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய திறப்பு விழாவில் ஆயிரகணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.

பின்னர், கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயத்தில் உள்ள பேராயர்கள் பலர் கலந்து கொண்டனர். அணிவகுப்புடன் ஆலயத்திற்கு வந்த பேராயர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், புறாக்கள் பறக்க விடப்பட்டும், பலூன்களை வானத்திற்கும் பறக்கவிட்டப்பட்டது. பின்னர், ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, ஆலயத்திற்கு அனைவரும் பங்கேற்ற பின்னர், பேராயர்கள் முன்னிலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் டவுன்ஹால் பகுதியில் ஈடுபட்டனர்.

