மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 17 லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது



கோவையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டிமடையில் சிறை பிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 20 வாகனங்களில் 17 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை ஒட்டிய கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை அந்தப் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டித் தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முகமது இலியாஸ், சாஜி, சபீர் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


அதன் பேரில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 17 வாகனங்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று க.க.சாவடி போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...