மிலாடிநபி விழா வருகின்ற 13.12.2016 அன்று வால்பாறை சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஜுமா மசூதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜி.கமாலுதீன் முத்தவல்லி கொடியேற்றினார்.

தொடர்ந்து வருகின்ற 28.12.2016-ம் தேதி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெறுகிறது. விழாவினை பள்ளிவாசல் தலைவர் அப்துல் காதர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருகிறார். கொடியேற்றத்தில் பள்ளிவாசல் இமாம், ஹாஜி மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.